பூமியில் உள்ள உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் சூரியன், இன்னும் 500 கோடி ஆண்டுகளில் தனது ஆயுளை முடித்துக் கொள்ளும் என்றும், அதே காலகட்டத்தில், பூமியின் வாழ்நாளும் முடிவுக்கு வரும் என்று தற்போதைய புதிய ஆய்வில் அனுமானிக்கப்பட்டுள்ளது. பால்வெளி மண்டலத்தில் ஒரு பகுதி பிரபஞ்சம், ஒரு காலகட்டத்தில் சுருங்கத் தொடங்கி, பின் அழிந்து விடும் என்றும், எல்லை இல்லா பிரபஞ்சம் குறித்த கோட்பாடு குறிப்பிடுகிறது. பால்வெளி மண்டலத்தின் எல்லை கள் குறித்து அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து, வடிவியல் முறை கணிதப்படி கணக்கிட்டு வருகின்றனர்.
ஆனால், அதன் எல்லைகள் குறித்த உண்மைகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. பெருவெடிப்பு கொள்கையின் படி, பிரபஞ்சம் இயற்கையாகவே எல்லையில்லாமல் விரிவடைந்து செல்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். "லட்சக்கணக்கானவர்கள் லாட்டரி சீட்டு வாங்கினாலும், அதில் ஒருவருக்குத் தான் முதல் பரிசு கிடைக்கிறது. அதுபோல, பிரபஞ்சத்தை விஞ்ஞானிகள் பலர் அதிகளவில் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவருக்குத்தான் விண்வெளி குறித்த ரகசியங்கள் தெரிய வருகின்றன.
பால்வெளி மண்டலத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் செயல்கள், மற்ற பிரபஞ்சங்களில் நின்று விட வாய்ப்புள்ளது' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபீல் பவுசோ. விரிவடையும் கொள்கையின்படி, பிரபஞ்சம் குறித்த சில கேள்விகளை விஞ்ஞானிகள் தவிர்த்து விடுகின்றனர்.
உதாரணமாக, நமது பிரபஞ்சம் இதற்கு முன்பு எப்படி இருந்தது. நமது பூமியில் மட்டும் ஏன் உயிர்கள் வாழும் சூழல் ஏற்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன. "நமது பிரபஞ்சம் குறித்த கோட்பாடுகளை நாம் முன்னதாக பெற்றிருக்கவில்லை. எந்த கோட்பாட்டை நாம் விரும்பு கிறோமோ அதற்கு ஏற்றாற்போல் நல்ல எண்ணங்களை பெற்றிருக்கிறோம். மற்ற பிரபஞ்சங்களிலும் இதேபோன்ற எண்ணங்கள் தோன்றுமா என்பது தெரியவில்லை' என்று ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த வான்இயற்பியல் விஞ்ஞானி சார்லஸ் லைன்வேவர் கூறுகிறார். பல்வேறு சூத்திரங்கள் மூலம் கணக்கிட்டதில் நமது பிரபஞ்சம் தோன்றிய 1,370 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்றும் இதன் இயக்கம் நின்று போக இன்னும் 500 கோடி ஆண்டுகள் ஆகும் என்றும் ராபீல் பவுசோ மற்றும் அவரது குழுவினர் முடிவுக்கு வருகின்றனர்.
தற்போது நமது சூரியனுக்கு 457 கோடி வயது ஆகிறது. நடுத்தர வயதுள்ள நட்சத்திரமாக சூரியன் திகழ்கின்றது. இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சூரியனின் ஆயுட்காலம் முடிந்து விடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த கால கட்டத்தில், சூரியனில் உள்ள வாயுகள் தீர்ந்து போய், அதன் வெளிப்புறம் சிவப்பாக, அச்சப்படுத்தும் வகையில் காட்சியளிக்கும். இறுதியாக விண்மீன் படலமாக மாறி விடும். அந்த நேரத்தில் பூமியின் விதியும் முடிந்து விடும் என்று கருதப்படுகிறது. ஆனால், சூரியன் மறைந்தாலும் பூமியில் வாழ முடியும் என்ற சூழ்நிலை அப்போது உருவாகலாம் என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment