ஓசோன் படலம் ஒன்றும் காணாமல் போய் விடவில்லை என்றும் இந்த நூற்றாண்டின் மத்திய பகுதியில் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடும் எனவும் கணித்துள்ளனர் ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.
ஓசோன் படலத்தை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் சிலவற்றால் உலகம் முழுதிலும் உள்ள பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு தோல் புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. சூரியனிலிருந்து வரும் ஆற்றல் மிக்க புற ஊதா கதிர்களை, முழுவதுமாக பூமிக்கு சென்றடையாமல் தடுப்பது தான் ஓசோன் படலத்தின் முக்கிய வேலை.
கடந்த சில ஆண்டுகளாகவே அண்டார்டிகா பனி கண்டத்தில் ஓசோன் அளவு குறைந்து காணப்படுவதும் அது குறித்த விழிப்புனர்ச்சிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது போன்று ஓசோன் குறைந்து காணப்படுவதையே ஓசோன் படலத்தில் ஓட்டை என பொதுவாக பலர் கூறுவது வழக்கம்.
துருவ பகுதிகளுக்கு வெளியே உள்ள ஓசோன் படலம் 2048 ஆம் ஆண்டில் 1980 இல் இருந்த பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்பது தற்போதைய ஐக்கிய நாட்டு விஞ்ஞானிகளின் கணிப்பு.
அண்டார்டிகா போன்ற துருவ பகுதிகளில் ஓசோன் படலம் 2073 இல் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச ஓசோன் தினத்தையொட்டி இந்த ஆராய்ச்சி சமர்பிக்கப்பட்டுள்ளது.
1980 களில் அண்டார்டிகா பகுதிகளில் இருந்த ஓசோன் படலத்தையும் , தற்போது அதே பகுதியில் ஓசோன் குறைவினால் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் ஒப்பிடும் படியான படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் உள்ள அடர்ந்த ஊதா நிறம் ஓசோன் அளவு குறைந்துள்ளதை காட்டுகிறது.
0 comments:
Post a Comment